இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லையென அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதாரம் 5 வீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.
அத்துடன், நாட்டின் கடன் சுமை படிப்படியாக குறைக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பந்துல குணவர்தன எப்போதும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவே கூறிவருகின்றார்.
கடந்த காலத்தில் 2500 ரூபாவில் ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த முடியும் என கருத்து வெளியிட்டார்.
இவ்வாறானவர்களே தற்போது பொருளாதார யோசனைகளை கூறுவதாக சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.