முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு 14.08.2016 அன்று மாலை ஸ்டுட்கார்ட் (Stuttgart) நகரிலும் இன்று (16.08.2016) மாலை டுசெல்டோர்ப் (Duesseldorf) நகரிலும் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் ஆங்கில மற்றும் யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் பல்லின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதைதவிர யேர்மனி தலைநகரமான பேர்லின் மற்றும் பிராங்பேர்ட் நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வும், எசன் நகரில் அமைந்துள்ள தூபியில் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.