இலங்கை ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார்

586 0

ஐக்கியநாடுகள் சபையின் 72 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ள மூன்றாவது தடவை இதுவாகும்.

மக்களை மையப்படுத்திய நிலையான உலகில் அனைவருக்கும் கௌரவமான வாழ்க்கை மற்றும் சமாதானத்திற்கான எதிர்ப்பார்ப்பு என்ற தொனிப்பொருளில் இம்முறை அமர்வு இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத் தொடர் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் உள்ள ஐக்கியா நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் பிரதான அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், நாளை மறுமதினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புறை ஆற்றவுள்ளார்.

இலங்கையின் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a comment