ரோகிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் என தெரிவித்து, பங்காளதேஸ் மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மியான்மாரில் ரோகிங்யா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இனவன்முறைகள் மூலம் நூற்றுக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
அதை தொடர்ந்து லட்சக்கணக்கிலான ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்காளதேஸூக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 வாரத்தில் மாத்திரம் 4 லட்சம் ரோகிங்யா மக்கள் அகதிகளாக பங்களாதேஸுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மியல்மாருக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என தெரிவித்து மியான்மரின் தேசிய கொடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.