வடக்கு பிரதேசத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஜப்பான் நிதியுதவி

309 0

இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஜப்பான் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையின் படி 190 மில்லியன் ரூபாய் ஜப்பானினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த  உடன்படிக்கையின் மூலம் கிடைக்கும் நிதியின் ஊடாக நிலக் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிதி ஒதுக்கீடுகளை செய்துவரும் நிலையில், இதுவரையில் 31.3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment