ஒற்றை இயந்திர விமானத்தின்மூலம் உலகை வலம்வரும் தமது முயற்சியில் ஒருக்கட்டமாக அவுஸ்திரேலிய இளைஞரான லக்லேன் (Lachlan) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
18வயதான இவர், தமது பயணத்தை 2016 ஜூலை 4ஆம் திகதியன்று அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையில் ஆரம்பித்தார்.
இவரின் பயணத்தில் 24ஆயிரம் கடல்மைல் தூரம் உள்ளடக்கப்பட்டுள்ளது
அத்துடன் 5 கண்டங்களுக்கு சொந்தமான 20 நாடுகளின் 26 விமானத்தளங்களில் அவர் தரையிறங்கவுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான சாதனையை ரியன் கெம்பல் என்ற 19வயதான அவுஸ்திரேலியர் 2013ஆம் ஆண்டு நிகழ்த்தியிருந்தார்.
இந்தநிலையில் லக்லேன் தமது சாதனையை நிறைவேற்றினால், அவரே மிக இளவயதில் ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகை வலம் வந்தவர் என்ற பெருமையை பெறுவார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரைஸி ஹட்ச்செசன்( Bryce Hutchesson) இளம் வயதினருக்கு குறிக்கோள்களை அடைவதற்கு லக்லேனின் முயற்சி உதாரணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.