கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.
சதுரிக்கா சிறிசேன, தனது தந்தையின் அரசியல் வரலாற்றை ‘ஜனாதிபதி தாத்தா’ (அதிபர் தந்தை) என்ற பெயரில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த நூல் வெளியீடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.