கதிர்காமம் – புத்தள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார்.
அத்துடன், 9 பேர் காயமடைந்தனர்.
கெப் ரக வாகனமும், சிறிய லொறியும் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள், கதிர்காமம், தெபரவௌ, சிரிகல மற்றும் புத்தள ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலனறுவையைச் சேர்ந்த 93 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.