பொது மக்களுக்கான ஓர் அவதான எச்சரிக்கை!

276 0

இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அறிக்கையொன்றினூடாக அந்த நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டை ஊடறுத்தும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின் வேகம் இன்று முதல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Leave a comment