உலக அணியை வெற்றிக்கொண்டது பாகிஸ்தான்

285 0

உலக பதினொருவர் அணிக்கு எதிரான 20க்கு20 தொடரை பாகிஸ்தான் அணி 2க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இறுதியுமான போட்டி பாகிஸ்தான் – லா{ஹர் – கடாஃபி மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற உலக பதினோருவர் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக அஹமட் செய்ஷாட் 89 ஓட்டங்களை ஆகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் உலக பதினொருவர் அணி சார்பில் இலங்கை அணி வீரர் திஸர பெரேரா, 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் திஸர பெரேர மற்றும் தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 32 ஓட்டங்களை ஆகக் கூடுதலாக பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியினூடாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் சொந்த மண்ணில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

Leave a comment