தென் மேற்கு லண்டனின் சுரங்க தொடரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
புல்ஹாம் பிரதேசத்தில் உள்ள பாசன்ஸ் கிரீன் சுரங்க தொடரூந்து நிலையத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நேற்று இடம்பெற்றது.
அதில் 29 பேர் காயமடைந்தனர்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய அந்நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.