ராஜிவ் காந்தி கொலை வழக்கு – 19ஆம் திகதி விசாரணைக்கு

337 0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இந்திய மத்திய புலனாய்வு பணியகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் இந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை இந்திய மத்திய புலனாய்வு பணியகம் விசாரிக்க வில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை விவரங்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

இதற்கு இந்திய புலனாய்வு பணியகத்தின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகத்தால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசாரணை விவரங்களை மனுதாரருக்கு வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது நீதிமன்றின் உரிமை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment