காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இலங்கையின் இராணுவம் அல்லது முறைப்பாடுகள் உள்ள அரச அதிகாரிகளை வெளிநாடுகள் கோரினால், அவர்களை அந்த நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான அத்தியாயம் ஒன்று அந்த சட்டமூலத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டமூலமானது நாடாளுன்றில் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டது.
இந்த நிலையில், அதனை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு இராணுவத்தினரோ அல்லது அவர்களை வழிநடத்திய அரசியல்வாதிகளோ பாதுகாககப்பட மாட்டார்கள் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.