யுத்தம் நிறைவடைந்தாலும் அந்த மனோ நிலையிலிருந்து மக்கள் மீளவில்லை – ஹிஸ்புல்லா

341 0

unnamedயுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் யுத்த மனோ நிலையில் இருந்து அதிகமானவர்கள் இன்னும் மீளவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 300 மில்லியன் செலவில் ஆரையம்பதி கோயில் குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கூரைத்தகடு தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தம் நிலவிய காலப்பகுதியில்தான் தமது பொருளதாரங்களை செலவிட்டு இத்தகைய தொழிற்சாலைகளை நிர்மாணிக்க தொழிலதிபர்கள் அச்சமடைந்திருந்தனர்.

எனினும் இன்று அந்த நிலைமை மாறியுன்ளது.

தற்போது யுத்த காலத்தைப்போல அச்சப்படவேண்டிய தேவையில்லை.

இத்தகைய பாரிய தொழில் முயற்சிகளில் வர்த்தகர்கள் துணிச்சலாக முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

வியட்நாம் மற்றும் சீன நாட்டு பாரிய இயந்திரங்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 100 பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. unnamed (2)