சீனாவின் முதலாவது ஆளில்லா தாக்குதல் உலங்கு வாநூர்தி

351 0

சீனா தனது முதலாவது ஆளில்லா தாக்குதல் உலங்கு வாநூர்தியை வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயன்ஜின் நகரத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக சீன அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லாமல் பயணித்து இலக்கினை துல்லியமாக தாக்கும் வல்லமையினை அந்த உலங்கு வாநூர்தி கொண்டுள்ளதனால், அதனை கொள்வனவு செய்ய பல வெளிநாட்டு இராணுவங்கள் அதிக அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளன.

7.2 மீட்டர் நீளமான இந்த உலங்கு வாநூர்தி 450 கிலோ கிராம் நிறைகொண்ட பொருட்களுடன் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பயணத்தினை மேற்கொள்ளும் தன்மையை கொண்டுள்ளதாக சீன உத்தியோகபூர்வ நாளேடு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு வர்த்தக ரீதியாக இந்த உலங்குவாநுர்தி உற்பத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment