முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத்தினர் ஆகியோரை தண்டிக்க மிகவும் சூட்சுமமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஸ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்கான நிதி சேகரிப்புக்காக யாசகம் கேட்கும் பணியில் பௌத்த பிக்குகள் ஈடுபட்டனர்.
கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் அவர்கள் யாசகம் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பிக்குகள் ஆடைக்காக சிறைக்குச் சென்றவர்களை பாதுகாக்கும் நிதியத்துக்கு நிதி சேகரிக்க பிக்குகளால் இந்த யாசகம் கேட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே பந்துல குணவர்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.