காணாமல்போனார் தொடர்பான பணியகத்துக்கான நிர்வாகிகளை இனங்காண்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்தாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் அமுலாக்கம் தொடர்பான வர்ததமானி அறிவித்தல் முதல் அமுலுக்கு வந்தது.
இந்த நிலையில், பணியகம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 209 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுப்பட்டது.
அத்துடன், வவுனியாவில் 205 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 199 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 193 ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் மருதங்கேணியில் 186 ஆவது நாளாகவும் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.