திலீபனின் நினைவேந்தலில் பார்த்தீபனின் தாயாரால் ஈகச்சுடரேற்றல்!

10120 0

இன்று (15) தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் இன்று(15) காலை 10.10 மணியளவில் ஆரம்பமானது.23 ஆண்டுகளாக அரசியல் கைதியாக சிறையில் வாடும் பார்த்தீபனின் தாயாரினால் தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச் சுடரேற்றப்பட்டு இவ்வணக்க நிகழ்வானது கனதிபெற்றது.

ஏனெனில் தமிழ் தேசியத்திற்காய் அரசியல் கைதியாக 23 ஆண்டுகள் சிறையில் வாடும் பார்த்தீபனை பெற்ற தாய், தமிழ் தாய்மார்களுக்கெல்லாம் மகனாய் விளங்கும் பார்த்தீபனுக்கு விளக்கேற்றியமை சாலச்சிறந்ததே.

தாயக விடுதலைப் போரில் ஆகுதியான வீரர்களின் வணக்க நிகழ்வில் அந்த தியாகிகளின் பெற்றோர்கள் , குழந்தைகள், மனைவிமார் போன்ற உறவுகளே விளக்கேற்ற தகுதியானவர்கள்.

அரசியல்வாதிகள், பிரமுகர்கள் தமது சுயநலத்திற்காகவே மாவீரர்களின் வணக்க நிகழ்வுகளில் கலந்து விளக்கேற்றுகின்றார்கள்.

அரசியல் கட்சிகளினால் ஒழுங்குபடுத்தப்படும் வணக்க நிகழ்வுகளில் மரியாதைக்குரியவர்களின் உறவுகள் சுடர்ஏற்றும் காலாச்சாரம் அவசியம் பேணப்பட வேண்டும்.

மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றவும் பொதுச்சுடர் ஏற்றவும் தகுதியானவர்கள் மாவீரர்களின் பெற்றோர்கள் , மனைவிமார், பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் மட்டுமே.

சென்ற வருட மாவீரர் நாள் ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவுகள் இன்றி அனுஸ்ட்டிக்க கூடியதாக அமைந்தது. துயிலும் இல்லங்களில் அரசியல்வாதிகள் பொதுச்சுடரினை ஏற்றியமை மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று(14) தீர்ப்பு வழங்கியுள்ளது . இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

பொதுமக்கள் சிலரால் வழக்குத்தொடரப்பட்டே இத் தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த இடங்களில் உள்ள பொதுமக்கள் அனுமதி கோரி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடருங்கள்.

தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நிகழ்வில் பார்த்தீபனின் தாயாரால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டமை நல்லதோர் எடுத்துக்காட்டாகும் எமக்கு.

 

Leave a comment