எழுத்தாளர்கள் மற்றும் நூல் வெளியிட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நூல் கண்காட்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் இரும்பை ஒத்தவர்கள் என்ற கருத்தொன்று உள்ளது.
இரும்புக்குள் இரும்பு மாத்திரமே உள்ளது.
எனினும், வாசிப்பை பழக்கமாக கொண்டவர்கள் சமூகத்தின் பிரச்சனைகளை உணரும், சமயோசித சிந்தனை மற்றும் பரந்த விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பர்.
அத்தகைய ஆரோக்கியமான சமூகம் ஒன்றே உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.