தேசிய காவற்துறை ஆணைக்குழு – நியமிக்கப்பட்டவருக்கு இன்று பதவி வழங்கப்படவில்லை

350 0

srilaka police_CIதேசிய காவற்துறை ஆணைக்குழுவினால் காவற்துறை விசேட நடவடிக்கைகளுக்கான செயலணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர். லதீஃபிற்கான பதவி இன்னும் வழங்கப்படாதுள்ளது.

இது தொடர்பில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி எம்.ஆர். லதீஃபிற்கு இந்த பதவி வழங்கல் தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைக்குழுவினால், காவற்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இன்னும் அநத பதவி வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் நாளை நடைபெறவுள்ள தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதகா அவர் தெரிவித்துள்ளது.