நாட்டின் வருமானம் மக்களிடையே பகிரப்படுவதில் பாரிய இடைவெளி ஒன்று காணப்படுவதாக ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
சொத்துடைய ஒரு தரப்பு நாட்டின் வருமானத்தில் 53 சதவீதத்தை அனுபவிக்கின்ற அதேவேளை, 20 சதவீத எளிய மக்கள், 4.4 சதவீத தேசிய வருமானத்தையே தமக்காக பெறுகின்றனர்.
நாட்டின் 5 பிரதான பிரச்சினைகள் உள்ளன.
அதிக கடன், வருமானம் சரியான முறையில் பகிரப்படாமை ஏற்றுமதி வீழ்ச்சி தேசிய வருவாய் வீழ்ச்சி, உற்பத்தி வீழ்ச்சி என்பனவே அவை.
எனவே இலங்கையின் பொருளாதார நிலையை மேம்படுத்த இதுவரையில் ஆட்சியில் இருந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் முடியுமா என்ற விவாதத்தை மேற்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் அவர்களால் முடியாது என்பது கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும்.
எனவே நாட்டின் தேசிய பொருளாதார திட்டம் ஒன்றை நோக்கிய புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.