சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் – மஹிந்த ஆதரவாளர்கள் நீக்கம்

314 0

slfp-logoஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக 40 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதியினால் இன்று வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் பலரின் பதவிகள் ரத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காமினி லொக்குகே, கோகிலா குணவர்தன, சஞ்சய சிரிவர்தனகே, சரத் குமார குணரத்ன, சந்தன ஜெயகொடி, பவித்ரா வன்னியாராச்சி, கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, ஜகத் பாலசூரிய உள்ளிட்டவர்கள் வகித்த அமைப்பாளர் பதவிகள் ரத்தாகி இருக்கின்றன.