அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக போராட்டத்தை தடுக்க முடியாது –  மின்சார சபை ஊழியர்கள் 

284 0
அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக போராட்டத்தை இல்லாமல் செய்ய முடியாது என மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தமது பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக மின்சாரதுறை தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று காலை 8.30க்கு முன்னர் பணிக்கு திரும்பாத பணியாளர்கள் அனைவரும் தாமாகவே பணியில் இருந்து இடைவிலகியவர்களாக கருதப்படுவர் என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக போராட்டத்தை தமது இல்லாமல் செய்ய முடியாது என மின்சார சபை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment