பொதுசுகாதார பரிசோதகர் உயிரிழப்பு – விசாரணைகள்; ஆரம்பம்

262 0
ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது குடும்பத்தார் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் ஹிங்குரக்கொட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜகத் விக்ரமரத்னவும் இதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் மின்சார விநியோகம் தடைபட்டிருந்ததால் அவரை பொலனறுவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தநிலையில் ஹிங்குரக்கொட வைத்தியசாலையின் அதிகாரிகளது கவனயீனத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a comment