அசாதாரண காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டிருந்த மின்சார விநியோக நடவடிக்கைகளை சீரமைக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது.
மின்சாரத்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளால், மின்விநியோகத் தடை ஏற்பட்டிருந்த சில பகுதிகளுக்கு மீண்டும் மின்னிணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்புடுகிறது.
இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் மற்றும் தற்போதைய தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்காத பணியாளர்களைக் கொண்டு, மின்சார விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன்றன.
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மின்சார பணியாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.