மோசடியான முறையில் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் இரண்டையும் அவற்றுக்கான போலி ஆவணங்களையும் தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைதாகியுள்ளார்.
ரத்மலானை பகுதியில் வைத்து, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து ஜீப் ரக வாகனம் ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அவர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.