ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகம் ராமநாதம்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து கடந்த 13ஆம் திகதி 12.78 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் சரவணன் என்ற 38 வயதான ஈழத் தமிழர் என்றும் அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமையை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் தங்கி இருந்த அவர் மேலும் பல போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.