தொண்டமனாறு பகுதியில் சுற்றுலா தளம் என பெயர்பலகை இடுவதற்கு நிறுவனம் ஒன்று எடுத்த முயற்சி அப் பகுதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
நேற்று (14) குறித்த பகுதிக்கு வந்திருந்த நிறுவனம் ‘’அக்கரை சுற்றுலா கடற்கரை’’ என பெயர் பொறிக்கப்பட்ட பலகை ஒன்றினை நாட்டுவதற்குரிய வேலைப்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த அப் பகுதிகள் மக்கள் இப் பகுதியில் உள்ள சுற்றுலா கடற்கரையினை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுலா கடற்கரை என்ற வாசகத்தினை அகற்றி சிறுவர் பூங்கா என மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இப் பகுதியில் சுற்றுலா கடற்கரை என தெரிவித்து வரும் உள்ளுர் வாசிகள் கஞ்சா இறக்குமதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டினர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த நிறுவனத்தினால் நாட்டப்படவிருந்த பெயர்பலகை நிறுத்தப்பட்டது.