இலங்கையில் எயிட்ஸ் அதிகரிப்பு

489 0

cel7-720x480இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதல் ஜுலை வரையான 7 மாதக் காலப்பகுதியில் 153 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.