சிறைச்சாலைகளில் கமரா வசதிகள் இல்லை. இதனால் இரண்டு மாதத்திற்குள் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் கமரா பொருத்தவுள்ளோம். முதலில் வெலிக்கடை சிறைச்சாலைக்கும் அதன் வைத்தியசாலைக்கும் கமரா பொருத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
அத்துடன் கைதியொருவர் ஒரு வைத்தியசாலையில்யில் அனுமதிக்க வேண்டுமாயின் நான்கு வைத்தியரின் சான்றிதழ் பெற வேண்டும் என்பதனை கட்டாயம் செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறைச்சாலைகளில் கமரா வசதிகள் இல்லை. இதன்படி தற்போது நாம் இரண்டு மாதத்திற்குள் அனைத்து சிறைச்சாலையில்களுக்கும் கமரா பொருத்தவுள்ளோம். முதலில் வெலிகடை சிறைச்சாலைக்கும் அதன் வைத்தியசாலைக்கும் கமரா பொருத்த தீர்மானித்துள்ளோம். இவ்வாறு கமராக்கள் பொருத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் தற்போது சிறைக்கு செல்லும் அனைவரும் வைத்தியசாலைக்கு செல்வது வழக்கமாகி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கைதியொருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமாயின் நான்கு வைத்தியரின் சான்றிதழ் பெற வேண்டும் என்பதனை கட்டாயம் செய்யவுள்ளோம்.
தற்போது உலகில் உள்ள சிறைச்சாலைகளின் தரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இலங்கை சிறைச்சாலை தரமிக்கதாக உள்ளது. தற்போதைக்கு பாரியளவில் பிரச்சினைகள் கிடையாது.
அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணைக்கு மாற்றுவதற்கான பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம் என்றார்.