மதுரவாயல் பகுதி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பெஞ்சமினை நீக்கியுள்ளதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்சி நிர்வாகிகளின் பதவிகளை டி.டி.வி. தினகரன் பறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ஜனார்த்தனம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் சுல்தான், இளைஞர் பாசறை செயலாளர் மகேஷ்பிரபு, புழல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் பேரழகன், அம்பத்தூர் ஒன்றிய செயலாளர் அய்யனார், மதுரவாயல் பகுதிச் செயலாளர் அமைச் சர் பெஞ்சமின், துணை செயலாளர் அருள்யுகா, மாதவரம் பகுதிச் செயலாளர் வேலாயுதம், ஆவடி நகர செயலாளர் தீனதயாளன், திருவேற்காடு நகர செயலாளர் சத்திய நாராயணன், திருநின்றவூர் பேரூராட்சி செயலாளர் தருமலிங்கம், திருவொற்றியூர் 18-வது வட்ட துணை செயலாளர் நாராயணன், அம்பத்தூர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆதிகண்ணன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத் தலைவராக ஜீவானந்தம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளராக அமீது, பாசறை செயலாளராக லோகநாதன், புழல் ஒன்றிய செயலாளராக ரமேஷ் ராகவேந்திரா, வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளராக கொளுமேடு வேலன், அம்பத்தூர் பகுதிச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். வேதாச்சலம், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளராக ஆதிகண்ணன், மதுரவாயல் பகுதி செயலாளராக போரூர் லக்கி முருகன், மாதவரம் பகுதி செயலாளராக ரகு, ஆவடி நகர செயலாளராக கல்யாணசுந்தரமூர்த்தி, திருவேற்காடு நகர செயலாளராக புரட்சி கோபி, திருநின்றவூர் பேரூராட்சி செயலாளராக நிர்மல்குமார், திருவொற்றியூர் 18-வது வட்ட செயலாளராக நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட சென்னை தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் குமாரி நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வீரமணி, இணைச் செயலாளர் மகேஷ், ஜெயலலிதா பேரவை தலைவர் சுகுமார், செயலாளர் முகமது இம்தியாஸ், இளைஞரணி தலைவர் செல்வம், செயலாளர் பீமாராவ், துணைச் செயலாளர் ராஜ்முகமது, மகளிரணி துணைத் தலைவர் வசந்திதாசன், செயலாளர் கஸ்தூரி, மாணவரணி செயலாளர் கோபால் உள்பட மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் வட சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு டி.டி.வி. தினகரன் பதவி வழங்கி உள்ளார்.