இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

275 0
குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதவாச்சி , பிஹிவியகொலாவ பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி ,  பிஹிவியகொலாவ  பகுதியில் வசித்துவந்த 23 வதுடைய சிசிர குமார  என்பவருக்கும் அவரது மனைவிக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக வீட்டை வீட்டு வெளியேறிய சிசிரகுமார என்ற இளம் குடும்பஸ்தர் வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்வர் இரு பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment