சிரியா நாட்டின் டேர் எஸ்ஸர் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷிய ராணுவத்தினர் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் அந்நாட்டினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களில் 39 பேர் கொல்லப்பட்டனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.