அகதிகளை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படல்

397 0

Peter-Duttonஅகதிகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சென்றடைந்த ஆறு இலங்கை அகதிகள் உடனடியாக நாடு கடத்தப்பட்டனர்.

ஆட்கடத்தலுக்கு உட்பட்டு அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த நிலையில், உடனடியாக அவர்கள் நாடுகடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான படகுகள் பிரவேசிப்பது குறித்து இலங்கையிடம் இருந்து தகவல் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே அகதிகளை கைது செய்து நாடுகடத்தவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்பற்றும் இந்த கொள்கைக்கு பாரிய கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.