தடையை மீறி மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தியது வடகொரியா – தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டு

421 0

தடைகளை மீறி வடகொரியா இன்று மீண்டும் கிழக்குத்திசை நோக்கி அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டி உள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

இந்நிலையில், இன்று மீண்டும் வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் இருந்து கிழக்கு நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டது என தென்கொரியா கூறியுள்ளது.

இந்த ஏவுகணை குறித்து அமெரிக்கா மற்றும் தென்க்கொரிய கூட்டுப்படையினர் ஆய்வுசெய்து வருகின்றனர் என கூட்டுப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Leave a comment