டெக்சாஸ் மாகாணத்தில் 82 பேர் உயிரிழப்பு!

416 0

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள ஹார்வே புயலின் கோரத்தாண்டவத்தால் டெக்சாஸ் மாகாணத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியதில் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு 3 நாளில் மட்டும் சுமார் 125. செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்தது.

நகரின் 3-ல் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கூரைகளில் தஞ்சம் அடைந்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பலரும் இப்புயலின் காரணமாக உயிரிழந்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கி மூன்றுவாரம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த புயலுக்கு 82 பேர் பலியாகி உள்ளதாக டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அபாட் தெரிவித்துள்ளார். இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.

Leave a comment