தேசிய விபத்துத் தவிர்ப்பு வாரம் பிரகடனம்

287 0

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை விபத்து தவிர்ப்பு வார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

பொலிசாரின் துணையுடன், சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

விபத்துக்களை இயன்றளவு குறைப்பது இதன் நோக்கமென தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் திலக் சிறிவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் ஆண்டொன்றில் பத்தாயிரம் பேர் வரை விபத்துக்களால்  உயிரிழக்கின்றனர்.

விபத்துக்களில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவிடுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment