வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை சோதித்துள்ளது.
வடக்கு ஜப்பானுக்கு மேலாக இந்த ஏவுகணை பயணித்து கடலில் வீழ்ந்ததாக தென்கொரியாவும் ஜப்பானியும் அறிவித்துள்ளன.
இந்த ஏவுகணை மணிக்கு 770 கிலோமீற்றர் என்ற வேகத்தில் சுமார் 3ஆயிரத்து 700 கிலோமீற்றர் தூரம் வரையில் பயணித்ததாக கூறப்படுகிறது.
இது கடலில் விழுவதற்கு முன்னதாக ஜப்பானின் ஹொகாய்டோ தீவுக்கு மேலாக பயணித்துள்ளது.
கடந்த மாதமும் இந்த தீவுக்கு மேலாக வடகொரியா தமது ஏவுகணை ஒன்றை பயணிக்கச் செய்திருந்தது.
அதேநேரம் கடந்த வாரம் ஆறாவது அணுகுண்டு சோதனையை நடத்திய வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து தமது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.