மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தாம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவிருப்பதாக மின்சாரதுறை தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று காலை 8.30க்கு முன்னர் பணிக்கு திரும்பாத பணியாளர்கள் அனைவரும் தாமாகவே பணியில் இருந்து இடைவிலகியவர்களாக கருதப்படுவர் என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விசேட அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சு இந்த அறிவித்தலை நேற்று விடுத்துள்ளது.