ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்குவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கம் கொடுக்க வேண்டும் என்று ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 36வது மாநாடு கடந்த திங்கட் கிழமை முதல் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றையதினம் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை முன்வைத்த உரையாற்றிய புறக்கணிப்புகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பின் பிரதிநிதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2015ஜெனீவா பிரேரணை அமுலாக்க விடயத்தில் அரசாங்கம் கடும் தாமதத்தை வெளிப்படுத்துகிறது.
இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கமானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைத்து செயற்பட்டாலும் கூட, அதன் பரிந்துரைகளை அமுலாக்குவதில் அரசியல்ரீதியான நோக்கம் இல்லாமல் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.