பிரான்சில் அரசியல்த் தலைவர்களின் சந்திப்புடனும் ஊடகங்களின் ஆதரவுடனும் ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்…

9219 0

 
http://www.republicain-lorrain.fr/edition-de-sarreguemines-bitche/2017/09/12/les-tamouls-alertent-l-opinion-sur-le-genocide

Hier, une dizaine de Tamouls ont fait une halte à Sarreguemines. Partis à vélo de la Commission européenne à Bruxelles, ils sont attendus à Genève.

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று [12.09.2017] PHALSBOURG மாநகரத்திலிருந்து தொடர்ந்தது. மாநகர முதல்வரிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட வேளையில் மாநில ஊடகங்கள் எமது அறவழிப் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் .
அதனைத் தொடர்ந்து SAVERNE மாநில முதல்வர் மனித நேயப் பணியாளர்களை வரவேற்று உபசரித்ததுடன் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் தமிழர்கள் அவர்களது பாரம்பரிய நிலங்களில் விடுதலை பெற்று சுகந்திரமாக வாழவும் தாம் ஐரோப்பிய ஆலோசனை சபையிலும் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் குரல்கொடுப்பதாகவும் கூடியவிரைவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஓர்நிரந்தர தீர்வு கிடைக்க பிரஞ்சு அரசாங்கத்திடமும் வலியுறுத்துவதாகவும் கூறி மனிதநேயப் பணியாளர்களின் இலட்சியத்தை அடைய வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள்.
பின் கொட்டும் மழையையும் வீசும் காற்றையும் எதிர்த்து STRASBOURG இல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடைந்தனர்  அங்கும் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

STARSBOURG நகரை வந்தடைந்த மனித நேயச்  செயற்பாட்டாளர்களை அங்கிருந்த  தமிழ் மக்கள் இன்முகத்துடன் வரவேற்று, மனிதநேயப்  பணியாளர்கள் எதிர்கொண்ட இன்னல்களைக் கேட்டறிந்துகொண்டனர். எமது அறவழிப் போராடத்தின் பயனை கண்ணூடாகப்  பார்ப்பதாகவும் எமது அறவழிப் போரட்டம் இன்று சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று தமிழருக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருவதற்கான காலம் வெகு விரைவில் கனியுமென உறுதிகூறி மனிதநேயப் பணியாளர்களை வழியனுப்பி வைத்தனர்.  இன்றைய ஈருருளிப் பயணம்” தமிழிரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாராகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.



                                                                                                                                                                                    

Leave a comment