கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் காணிகள் அளவீடு செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரணைதீவு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது குறித்த காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே தற்போது அளவீடுகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.