நுவரெலியா மாவட்டத்தில் பன்னிரண்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது தொடர்பில் மத்திய மாகாண சபை செயலாளரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின்போதே தாம் இந்தக் கருத்தினை முனைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளையும் அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக முன்வைக்கப்பட்டுவந்தது.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்திலேயே இது சாத்தியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றும்போது தேசிய கொள்கைகளை கவனத்தில் எடுக்கும் அதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் மலைப்பாங்கான புவியியல் நிலைமைகளும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் என திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.