ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி விற்பனை செய்த ஐவருக்கு  விளக்கமறியல்

247 0

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி விற்பனை செய்த ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களினால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஐவரையே மாவட்;ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சாதாரண உடைகளில் சென்றிருந்த மதுவரி அதிகாரிகளுக்கு ஹெரோயின் விற்பனை செய்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a comment