நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவிடம் காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவினரால் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டேசி ஃபொரஸ்ட்டின் பெயரில் கல்கிஸ்ஸை – மிஹிந்து மாவத்த பகுதியில் வீடொன்றுடனான காணி கொள்வனவு செய்தமைஇ
மற்றும் ரத்மலான பகுதியில் காணியொன்று கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.