எமது இனத்தின் விடுதலைக்காக உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் நீராகாரம்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாள்நாளை வெள்ளிக்கிழமை (15.09) தொடங்குகின்றது. தொடக்கநாள் நிகழ்வினை ஜனநாயகபோராளிகள் கட்சியினர் திலீபன் உண்ணாநோன்பிருந்த நல்லூரிலேயே அனுஷ்ரிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தாயகத்திலும் புலத்திலும் வாழ்கின்ற எம்தாயக உறவுகள் ஆரம்ப நிகழ்வினை அனுஷ்ரிக்குமாறும் நினைவேந்தல் நடைபெறுகின்ற காலத்தில் கேளிக்கை நிகழ்வுகளைத்தவிர்த்து திலீபனின் நினைவுகளைச்சுமந்து உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.