எந்தவொரு துறைமுகத்தையும் குத்தகைக்கு கூட வழங்க எதிர்பார்க்கவில்லை – மஹிந்த

248 0

நாட்டின் எந்த துறைமுகத்தையும் அரசாங்கத்தினால் விற்பனை செய்யத் தயாரில்லை எனவும் இது பற்றி மக்கள் விடுதலை முன்னணி போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர நாட்டில் உள்ள எந்தவொரு துறைமுகத்தையும் குத்தகைக்குக் கூட வழங்க எதிர்பார்க்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

இதேவேளை, மீனவர்களின் கடற் தொழிலை மேம்படுத்த எமது அரசாங்கத்தால் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவது மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் ஏற்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment