அனுராதபுரம் புளியங்குளம் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் நீர்த்தொட்டிக்கு அருகில் இருந்து நேற்று முன்தினம் 11 நாட்களே கடந்த ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அக்குழந்தையை குழந்தை மகளிர் அதிகாரிகள் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த குழந்தையை பெற்றெடுத்த பெண் குறித்த மருத்துவ மனைக்கு அருகிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும், குறித்த குழந்தை 11 நாட்களுக்கு முன் அநுராதபுர வைத்தியசாலையில் பிறந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாய் தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த மாணவி என்று ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கையடக்க தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த பெண் வசிக்கும் இடத்தை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.