வருங்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க செய்யக் கூடிய அனைத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தன்னை பதவி நீக்கம் செய்தமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கட்சிகள் இரண்டிலும் சிறந்தவர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், குழப்பம் இருப்பது, அரசாங்கம் தொடர்பிலேயே தவிர ஜனாதிபதியுடன் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் சில விடயங்கள் தொடர்பில் தவறான செயற்பாடுகளை பின்பற்றுவதாகவும், அதனை விமர்சிப்பதில் ஒருபோதும் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை பிளவுபட்டுக் காணப்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எதிர்கால எதிர்பார்ப்பு எனவும் அருந்திக்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.