நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்

239 0

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரினால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா பகுதியை சேர்ந்த பிரதீப் கமால் என்பரே நுவரெலிய மாவட்ட செயலக வளாகத்தில் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆர்பாட்டம் தொடர்பில் பிரதீப் கமால் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதே போல ஊழல் மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு (சுராபது கொமசாரீஸ் ஜெனரால்) கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே பதவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு இவ்வறான உயர் பதவியை வழங்க கூடாது என்பதை வெளிப்படுத்தவே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாகவும், வேறு ஒருவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment